கூரை வீடு எரிந்து பெண் உயிருடன் கருகி பலி

மயிலாடுதுறை அருகே கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழபட்ட மங்கலத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகுணாதேவி(வயது37) இவருக்கும், முனியசாமி என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுகுணாதேவி கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு கூரைவீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவரது குழந்கைள் வெளியூரில் தங்கி படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சுகுணாதேவி வீட்டில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. அந்த தீ வீட்டிலும் பரவியது. இதைத்தொடர்ந்து தீயில் கருகி சுகுணாதேவி பரிதாபமாக இறந்தார். வீடும் எரிந்து முற்றிலும் சேதமானது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுகுணாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் கீழபட்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com