மாட்டுத்தாவணியில் பெண்ணிடம் நகை பறிப்பு

மாட்டுத்தாவணியில் பெண்ணிடம் நகை பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 3 1/2 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
Published on

மதுரை:

மதுரை ஆண்டாள் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் காளிரஞ்சன். இவரது மனைவி பாண்டிச்செல்வி (வயது 38). இவர் மாட்டுத்தாவணியில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.

மஸ்தான்பட்டி என்ற இடத்தில் பாண்டிச்செல்வி சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்னால் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பாண்டிச்செல்வியின் கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாண்டிச் செல்வி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். ஆனால் உதவிக்கு யாரும் வராத நிலையில் மர்ம மனிதர்கள் மின்னலாய் மறைந்து விட்டனர்.

இது குறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com