நேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்

கோவில் நேர்த்திக்கடனுக்காக தனது நாக்கை துண்டாக அறுத்து பின்னர் மயங்கி விழுந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் டார்சாமா கிராமத்தில் உள்ள பிஜேசன் அம்மன் கோவிலுக்கு கவுத்தி டோமர் என்ற பெண் தினமும் சென்று வழிபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்ற அவர் திடீரென தனது நாக்கை துண்டாக அறுத்தார். இதனை அடுத்து ரத்தம் அதிகளவில் வெளியேறியதால அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதன் பின்னர், கோவிலில் இருந்த மற்றவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தான் வேண்டியது நடந்தால் நாக்கை அறுத்துக்கொள்வதாக அவர் வேண்டியுள்ளார். தனது வேண்டுதலை நிறைவேற்ற நேற்று தனது நாக்கை கோவிலில் வைத்து அறுத்துள்ளார்” என தெரிவித்தனர்.

திருமணம் ஆனதில் இருந்து காலை, மாலை என இருவேளையும் அந்த கோவிலுக்கு செல்லும் தனது மனைவி, விஷேச நாட்களில் கோவிலிலேயே இருப்பார் வீட்டுக்கு வருவது இல்லை என கவுத்தி டோமரின் கணவர் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com