ராஜாக்கமங்கலம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 9 1/2 பவுன் செயின் பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் 9 1/2 பவுன் செயினை மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 9 1/2 பவுன் செயின் பறிப்பு
Published on

நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் வடக்கு கண்ணக்குறிச்சியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராபின்சன். இவரது மனைவி சுதா (வயது 42).

இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்அ னுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பஸ்சில் வந்தார். பின்னர் அவர் இரவு வீடு திரும்பினார். வெள்ளிச்சந்தையில் பஸ்சை விட்டு இறங்கி வடக்கு கண்ணக்குறிச்சி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுதாவின் கழுத்தில் கிடந்த 9 1/2 பவுன் செயினை பறித்தனர். சுதா செயினை விடாமல் பிடித்துக்கொண்டார். சிறிது நேரம் கொள்ளையர்களுடன் போராடினார். ஆனால் கொள்ளையர்கள் செயினை பறித்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து சுதா ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சுதாவிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். அப்போது சுதா கணபதிபுரத்தை சேர்ந்த பாபு, சுரேஷ் ஆகிய இருவரும்தான் தன்னிடம் செயினை பறித்துச் சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த பாபு, சுரேஷ் இருவரும் தலைமறைவாகி விட்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com