

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா பகுதியில் இளம் பெண் மார்க்கெட் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த அவரது தூரத்து உறவினர்களில் ஒருவன், வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி அவரை காரில் ஏற்றியுள்ளான்.
அந்த காரில் அவனது நண்பர்கள் 3 பேரும் இருந்துள்ளனர். அப்போது இளம் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல் அவரை காருக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். #girlgangrapped