ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு  தெரிவித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் விவசாய நிலங்களில் தனியார் காற்றாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரியும், கடந்த 2 மாதங்களாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நடந்த காற்றாலை அமைக்கும் பணியின் போது சாலைகள், வரத்து கால்வாய், குளங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களை சேதப்படுத்திய காற்றாலை நிறுவனத்தின் மீது நடவடிக்கை வலியுறுத்தி புதியம்புத்தூர் பஸ் நிலையம் முன்பு தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரஞ்சித், ஒன்றிய அவைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட அவைத்தலைவர்கள் கொம்பையா பாண்டியன், அலெக்ஸ்சாண்டர், மாவட்ட துணை செயலாளர் மாலைராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அழகிரிசாமி, ஒன்றிய செயலாளர்கள் தங்கசாமி, சுரேஷ், ஒன்றிய துணைசெயலாளர்கள் மகாராஜன், கருப்பசாமி, கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் புதியம்புத்தூர் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com