உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - வில்லியம்சன்

உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணி தகுதியானது என நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
வில்லியம்சன் - மார்கன்
வில்லியம்சன் - மார்கன்
Published on

லண்டன்:

உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் கூறியதாவது:-

இறுதிப் போட்டியில் பல வி‌ஷயங்கள் நடந்துவிட்டன. வில்லியம்சன் மற்றும் அவரது அணிக்கு நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டம் இரு அணிகளுக்கும் தகுதியான ஒன்றாகும்.

விக்கெட்டுகள் சரிய சரிய இலக்கை எட்டுவது மிகவும் கடினமானது. ஸ்டோக்ஸ்- பட்லர் ஜோடி போட்டியை மாற்றி விட்டது. சூப்பர் ஓவரிலும் அவர்களையே அனுப்பினேன். ஒட்டு மொத்த பெருமைகளும் அவர்கள் இருவரையும் தான் சாரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இறுதிப் போட்டி கடும் சவாலாக இருந்தது. உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியானது. அந்த அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. இன்னும் கூடுதலாக 10 முதல் 20 ரன்கள் அடித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். எங்கள் அணி வீரர்களும் அபாரமாக ஆடினார்கள். கடைசி வரை போராடினார்கள்.

ஸ்டம்பை நோக்கி எறியப்பட்ட பந்து பென்ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது அவமானகரமானது. விளையாட்டில் இதுவும் ஒரு பகுதியாகும். ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com