ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும்: அசாருதீன்

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என அசாருதீன் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா அசாருதீன்
ரோகித் சர்மா அசாருதீன்
Published on

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கொடுத்தால் ஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவை விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘ஹனுமா விஹாரியை பொறுத்தவரை அவர் போதுமான அளவு வாய்ப்பு பெற்றுள்ளார். ரோகித் சர்மா போன்ற வீரரை அணிக்கு தேர்வு செய்தால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும்.

எனது பார்வையில் அவரது டெஸ்ட் சாதனை மிகவும் மோசமானதாக இல்லை. ரோகித் சர்மாவின் டெஸ்ட் புள்ளி விவரத்தை நீங்கள் பார்க்கலாம். அவர் சிறந்த வீரர்கள். மேலும், ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆகவே, டெஸ்ட் போட்டியில் விளையாடும் தகுதி அவருக்கு இருக்கிறது’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com