பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பா.ஜ.க. தலைவர் மகன்: மோடி, அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? சீதாராம் யெச்சூரி கேள்வி

ஐ.ஏ.எஸ். அதிகாரி மகளை பின்தொடர்ந்த அரியானா பா.ஜ.க தலைவர் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா மவுனமாக இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பா.ஜ.க. தலைவர் மகன்: மோடி, அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? சீதாராம் யெச்சூரி கேள்வி
Published on

புதுடெல்லி:

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க தலைவர் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா மவுனமாக இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளுக்கு யாரோ உதவி செய்துள்ளதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com