

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே ராகுல் காந்தி, ஸ்மிரிதி ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,67,598 ஆகும். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி இரானி கூறியதாவது:
அமேதிக்கு இன்று புதிய விடியல். இந்த வெற்றி புதிய உறுதியை அளிக்கிறது. அமேதி மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதியை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் நம்பிக்கையை வாக்குகளாக செலுத்தியுள்ளீர்கள். தாமரையை அமேதியில் மலர வைத்துள்ளீர்கள். அமேதி தொகுதிக்கு பணியாற்ற என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.