3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

செயிண்ட் கிட்சில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #WIvBAN
3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
Published on

செயிண்ட் கிட்ஸ்:

வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. 

முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசமும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், செயிண்ட் கிட்ஸ் நகரில் வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக

தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே தமிம் இக்பால் பொறுப்புடன் ஆடினார். அனமுல் 10 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 37 ரன்னிலும் முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிதானமாக ஆடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய மகமதுல்லா 49 பந்துகளில் 67 ரன்கள் அடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி  வருகிறது. #WIvBAN

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com