மேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் பெருமழை - 13 பேர் பலி

மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த பெருமழைக்கு 13 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் பெருமழை - 13 பேர் பலி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் இடி, மின்னலுடன் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை பற்றிய முன்னெச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலர் வழக்கம்போல் வயல் வேலைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், நாடியா, முர்ஷிதாபாத், வடக்கு 24-வது பர்கானாஸ் மாவட்டங்களில் நேற்றிரவு மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர். தக்‌ஷின் தினஜ்பூர் மற்றும் மால்டா ஆகிய  மாவட்டங்களில் 4 மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர். புர்லியா மாவட்டத்தில் மின்னல் தாக்கி காயமடைந்த 4 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. #WestBengal #LightningStrikes

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com