தா.பேட்டை அருகே தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தா.பேட்டை அருகே தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள்
Published on

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம்  தா.பேட்டை அடுத்த ஜடமங்கலம் கிராமத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோபி, சங்கர், தனபால் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். 

தா.பேட்டை ஒன்றிய செயலாளர் அழகை.குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்த சாரதி பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சந்திரசேகரன், கேப்டன் மன்ற துணைச் செய லாளர் பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் சங்கர், துணைச் செயலாளர்கள் சதீஷ்குமார், பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் தமிழரசன், கிளை செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் சிவமணி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com