மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உழைப்போம்- கரூர் மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்

செயல் தலைவர் முகஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உழைக்க கோரி கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. #mkstalin
மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உழைப்போம்- கரூர் மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்
Published on

கரூர்:

கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, மாநில விவசாய அணி செய லாளர் சின்னசாமி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், மாநில சட்டப்பரிவு இணை செயலாளர் வக்கீல் மணி ராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கும், அவரது மறைவால் துக்கம் தாளாமல் இறந்த கட்சி தொண்டர்களுக்கும், மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தலைவர் மறைவுக்கு பின்னர் கட்சியையும், தொண்டர்களையும் தாயாக பாதுகாத்து வழிநடத்தும் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழியில் கழகம் காக்கவும், அவரது தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உழைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ரகுநாதன், கந்தசாமி, நகர செயலாளர்கள் கரூர் கணேசன், வக்கீலு சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அன்பரசன், வக்கீல் அணி செயலாளர் குடியரசு மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #mkstalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com