இன்னும் ஏராளமான இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது: ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இன்னும் ஏராளமான இடங்களை நிரப்ப வேண்டும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா
ரோகித் சர்மா
Published on

ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் கடைசியில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான சிறந்த அணியை தேர்வு செய்யும் பணியை நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

வரும் போட்டிகளில் வீரர்களை பரிசோதித்து சிறந்த வீரர்களை தேர்வு செய்வார்கள். ஏறக்குறைய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே இன்னும் நிரப்பப்பட வேண்டும் என ரசிகர்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஏராளமான இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘உலக கோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. நாங்கள் அதற்கு தயாராகி கொண்டிருக்கிறோம். ஏராளமான வீரர்கள் உலக கோப்பையில் விளையாட தயாராக உள்ளனர்.

இன்னும் ஏராளமான இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கான வேலை நடைபெற்று வருகிறது. 15 முதல் 20 வீரர்கள் அணியில் இடம் பிடிக்க சிறப்பான ஃபார்ம் உடன் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் என்ன செய்ய வேண்டும், உலகக்கோப்பையை வெல்ல எப்படி விளையாட வேண்டும் என்பது பொறுத்து வீரர்கள் தேர்வு அமையும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com