அணிகள் இணைந்தால் எங்களுக்கு கவலை இல்லை, நாங்கள் தான் கட்சி: வெற்றிவேல்

அ.தி.மு.க. அணிகள் இணைந்தால் கவலை இல்லை என்றும், தாங்கள்தான் உண்மையான கட்சி என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அணிகள் இணைந்தால் எங்களுக்கு கவலை இல்லை, நாங்கள் தான் கட்சி: வெற்றிவேல்
Published on

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இன்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

அப்போது, அணிகள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, அணிகள் இணைப்பு குறித்து கவலை இல்லை என்றும், நாங்கள்தான் கட்சி என்றும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com