

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. இதனால் 3-வது போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புவனேஸ்வர் குமார், இசாந்த் ஷர்மா ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாளைய போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நாளைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சீரான வகையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, வீரர்கள் வழக்கமான அடிப்படையில் விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். அணியில் ஒரு பிரச்சினை தலைதூக்கி அது கட்டுங்கடங்காத வகையில் செல்லும்வரை, சிறந்த வகையில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து அணியில் ஏராளமான போட்டியில் விளையாட வேண்டும்.