புதுவண்ணாரப்பேட்டையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தொழிலாளி காயம்

புதுவண்ணாரப்பேட்டையில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தொழிலாளி காயம்
Published on

ராயபுரம்:

புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். அப்பகுதியில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று மாலை குடோனில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் கரும்பு புகை வெளியேறியது. உடனே ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இதில் கலையரசன் தீயில் சிக்கி காயம் அடைந்தார். அவரை பொது மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புகை மூட்டத்தில் சிக்கி பக்கத்து வீட்டை சேர்ந்த பூங்கொடி என்பவர் மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

X

Maalai Malar
www.maalaimalar.com