இந்திய செல்போனை சீனர்கள் பயன்படுத்துவதை பார்க்க வேண்டும்: ராகுல்காந்தி ஆசை

இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களை சீன இளைஞர்கள் கையில் எடுத்து கொண்டு செல்பி படங்கள் எடுப்பதை பார்க்க வேண்டிய நாளை விரும்புவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய செல்போனை சீனர்கள் பயன்படுத்துவதை பார்க்க வேண்டும்: ராகுல்காந்தி ஆசை
Published on

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பவாண்டோ சாகிப் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

2019-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஜி.எஸ்.டி. வரி முறையில் முற்றிலும் சீரமைப்பு செய்யப்படும்.

மேலும் அடுத்து நடக்க கூடிய ஜி.எஸ்.டி. நிதி மந்திரிகள் கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஜி.எஸ்.டி. சீரமைப்புகளை கொண்டு வந்து சிறுதொழில்கள் மற்றும் மறைமுக தொழில்களை பாதுகாக்க வற்புறுத்தப்படும்.

சீனாவில் தினமும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பேன் என்று பாரதிய ஜனதா 2016 தேர்தல் வாக்குறுதியில் கூறியது.

இப்போது இவர்கள் தினமும் 450 பேருக்குதான் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கிறார்கள். மத்திய அரசு இளைஞர்களை ஏமாற்றி விட்டது.

பகவத் கீதையில் கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி பலனை மட்டும் அறுவடை செய்கிறார். வேறு எந்த பணியும் செய்வதில்லை.

இந்திரா காந்தி 2 வகை மக்கள் இருப்பதாக கூறுவார். ஒரு வகை மக்கள் உழைப்பை மட்டும் நம்புபவர்கள். இன்னொரு வகை மக்களுக்கு உழைப்பின் மீது நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், விரைவாக பலன் கிடைக்க வேண்டும் என்று இருப்பார்கள். இதே போன்றுதான் மோடியும் இருக்கிறார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களை சீன இளைஞர்கள் கையில் எடுத்து கொண்டு செல்பி படங்கள் எடுப்பதை பார்க்க வேண்டிய நாள் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பிரதமர் மோடி ஒரு சில ஊழல் விவகாரங்களை மட்டும் கையில் எடுத்து பேசுகிறார். மற்ற ஊழல் வி‌ஷயங்களில் மவுனமாக இருக்கிறார். வியாபம் ஊழல், லலித் மோடி ஊழல், மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றி அவர் வாய் திறப்பது இல்லை.

அதுபோல் அமித்ஷா மகன் ஜெய் ஷா மற்றும் மோடியின் கோடீஸ்வர நண்பர்கள் விவகாரம் பற்றியும் எதுவும் பேசுவதில்லை.

நாராயணரானே, பாதல், அனுராக் தாகூர், இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் போன்றவை பற்றி ஒரு நாளும் பேசியதில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இதனால் ஏழைகள் பயன் அடைந்தார்கள். ஆனால், தற்போதைய அரசு இந்த பணத்தை நானோ கார் தயாரிக்க கொடுக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com