

போரூர்:
விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் காந்தி நகர் தமயந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பாக்கான மாவா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவா விற்பனையில் ஈடுபட்ட மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து போதை பாக்கு தயாரிக்க வைத்திருந்த 90 கிலோ மாவா பொருட்கள், 3 கிரைண்டர், ஒரு மிக்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மோகன் மாவா மூல பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து அறைத்து சிறிய பொட்டலங்கள் மூலம் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.