முகமது சிராஜ் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட விராட் கோலி

ஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டிக்கு முன்பாக முகமது சிராஜ் அவரது வீட்டில் விராட்கோலிக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.#IPL2018 #viratkholi #RCB
முகமது சிராஜ் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட விராட் கோலி
Published on
ஐதராபாத் பிரியாணிக்கு எப்போதுமே இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடையே மவுசு உண்டு. ஐபிஎல் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் பெங்களூர்- ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது.



இப்போட்டிக்கு முன்பாக பெங்களூர் கேப்டன் விராட்கோலி, சாஹல், மன்தீப்சிங் மற்றும் சில வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள சக அணி வீரரான முகமது சிராஜ் வீட்டுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கு சக வீரரான ஐதராபாத்தை சேர்ந்த அம்பதி ராயுடு ஐதராபாத் பிரியாணி விருந்து அளித்து இருந்தார்.#IPL2018 #viratkholi #RCB
X

Maalai Malar
www.maalaimalar.com