மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஜோடி

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விழுப்புரத்தை சேர்ந்த பாரதிதாசன் - ஸ்ரீமதி ஆகியோரது திருமணம் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஜோடி
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்று கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், புரசைவாக்கம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் முன்னிலையில், விழுப்புரத்தை சேர்ந்த பாரதிதாசன் - ஸ்ரீமதி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. மணமக்களை மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com