விக்கிரவாண்டி தொகுதியில் விடியவிடிய போலீசார் வாகன சோதனை

விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் வாகன சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
போலீசார் வாகன சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
Published on

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க 39 பறக்கும் படைகள் மற்றும் நிலைகண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பறக்கும் படையினர் நேற்று முதலே வாகன சோதனை நடத்த தொடங்கினர்.

விக்கிரவாண்டி சுங்கவரி மையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து சோதனை மேற்கொண்டனர்.

விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், மருது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடியவிடிய நடத்தப்பட்டது.

இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com