விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
எம்எல்ஏ அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
எம்எல்ஏ அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
Published on

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அன்று உடல் நலக் குறைவால் இறந்தார்.

அதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 21-ந் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. அதையொட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

விக்கிரவாண்டியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை தேர்தல் நன்னடத்தை விதி அமல் காரணமாக தேர்தல் அலுவலர் சந்திரசேகரன், தலைமையில் தாசில்தார் பார்த்திபன் பூட்டி சீல் வைத்தார்.

அப்போது நேர்முக உதவியாளர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com