

பெரம்பலூர்:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் சிறுகுடல், பீல்வாடி, மண்டபம், நன்னை,வேப்பூர் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும், கடந்த ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்க பரிசும் வழங்கப்பட்டது.
ஒதியம் கிராமத்தில் கொடி ஏற்றி வைத்து ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்று வழங்கும் விழாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேப்பூர் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சோழரசன் ஏற்பாட்டில் செஞ்சேரி வித்யாஸ்ரமம் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் , மற்றும் மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் சுடர்செல்வன் ஷங்கர், மேகலா ரங்கராஜ், மற்றும் வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், மற்றும் ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார் பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார் தொழிற் சங்கத் தலைவர் ஜோதிலட்சுமி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் செங்கமலை, கோவிந்தன், சங்கர்,மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.