ராஜபாளையத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராஜபாளையத்தில் தே.மு.தி.க. சார்பில் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தே.மு.தி.க. சார்பில் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்பட்ட காட்சி.
தே.மு.தி.க. சார்பில் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்பட்ட காட்சி.
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் தே.மு.தி.க. சார்பில் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் சையது காஜா ஷெரிப் கலந்து கொண்டு பார்க் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் விஷேச பூஜை செய்தார். பின்னர் ராமலிங்கபுரம் கிராமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இளந்திரை கொண்டான் கிராமத்தில் 250 ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் தூய்மைப்பணியாளர்கள் 50 பேருக்கு முக கவசம், 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை முருகேசன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சண்முகநாதன், ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நகர செயலாளர் குமார், நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com