கரூரில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம்- எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பு

திருமாவளவனை பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்ட எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கரூரில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம்- எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பு
Published on

கரூர்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்றி அவதூறு கருத்தினை வெளியிட்டதாக கூறி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா அருகே கூடினர். பின்னர் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியபடியே அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி எரித்தனர். அப்போது அவதூறு கருத்து வெளியிட்டதற்கு எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், எச்.ராஜா மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அக்னி அகரமுத்து, செய்தி தொடர்பாளர் இளங்கோ, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com