புதுவை அருகே தமிழக கவர்னருக்கு கருப்பு கொடி - விடுதலை சிறுத்தையினர் கைது

புதுவை அருகே தமிழக கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு தயாராக இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி காட்டிய காட்சி.
விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி காட்டிய காட்சி.
Published on

சேதராப்பட்டு:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான சர்வம் என்ற தொண்டு நிறுவனம் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பூத்துறை என்ற இடத்தில் உள்ளது.

அதை பார்வையிடுவதற்காக கவர்னர் பன்வாரிலால் வந்தார். அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக திருச்சிற்றம்பலம் ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் கவர்னர் சென்னையில் இருந்து பூத்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதலை சிறுத்தை கட்சியினர் காரில் வந்து பூத்துறை கிராமத்துக்கு செல்லும் நுழைவு பாதையில் குவிந்தனர்.

அவர்கள் கருப்பு கொடி காட்டுவதற்கு தயாரானார்கள். உடனே போலீஸ் டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.

அதன் பிறகு கவர்னர் சர்வம் தொண்டு நிறுவனத்துக்கு சென்று இடங்களை சுற்றி பார்த்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com