

இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.
அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் ஒரு துயரமான நாளாகும். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்நிலையில், அமிர்தசரஸ் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜாலியன்வாலா பாக் தியாகிகள் சதுக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று அஞ்சலி செலுத்தினார்.