

திருவனந்தபுரம்:
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர் 16-ந்தேதி பகல் 12 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து திருவனந்தபுரம் கனககுன்னு அரண்மனையில் மாலை 4 மணிக்கு ஸ்ரீசித்திரை திருநாள் அமைப்பின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழா முடிந்ததும் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லும் வெங்கையா நாயுடு அங்கிருந்து விமானம் மூலம் கோழிக்கோடு செல்கிறார். அங்கு 17-ந்தேதி நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் வெங்கையா நாயுடு கலந்துகொள்கிறார். அன்று பகல் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேரளா வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். #tamilnews