மகாளய அமாவாசை: முருகன் கோவிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு பெரியகுளம் அருகே உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோவிலில் துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Published on

பெரியகுளம்:

மகாளய அமாவாசையை முன்னிட்டு பெரியகுளம் அருகே உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தனது சொந்த ஊரான பெரியகுளம் வந்தார். இன்று காலையில் அவர் தனது வீட்டுக்கு வந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பிறகு பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு வழிபாடு செய்ய சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பிறகு பாலசுப்பிரமணியர் சன்னிதியிலும் பரிவார தெய்வங்களையும் வழிபட்டு சாமி தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com