வேம்படிதாளம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி பலி

வேம்படிதாளம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேம்படிதாளம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி பலி
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் மாவட்டம் சங்ககிரி, வைகுந்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் வேம்படிதாளம் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com