வெள்ளிசந்தை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 1/2 பவுன் நகை பறிப்பு

வெள்ளிசந்தை அருகே வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வெள்ளிசந்தை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 1/2 பவுன் நகை பறிப்பு
Published on

மணவாளக்குறிச்சி:

வெள்ளிச்சந்தை அருகே ஆளூர் பெரும் செல்வவிளையைச் சேர்ந்தவர் கொச்சூர். இவரது மனைவி சந்திரா, (வயது 57).

கணவன்-மனைவி இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் ஒருவர் சந்திராவின் கழுத்தில் கிடந்த 5 1/2 பவுன் நகையை பறித்தார். இதையடுத்து சந்திரா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர் செயினை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இது குறித்து சந்திரா, வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சந்திராவிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com