வேலாயுதம்பாளையம் அருகே பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் மற்றும் போலீசார் தோட்டக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அய்யம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் மது விற்றவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், கரூர் காந்தி சாலை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பரத்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com