வாழப்பாடியில் சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலி

வாழப்பாடியில் சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலி

வாழப்பாடியில் சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (51). மாற்றுத் திறனாளியான அவருக்கு திருமணமாக வில்லை. வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி மைக்ரோ நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற அவர், மைக்ரோ நிலையம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com