வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, பின்னர் வங்கமொழியில் எழுதப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
Published on

சென்னை

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்(TET), வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வங்கமொழி என பதிலளித்த வீரமணி என்ற விண்ணப்பதாரர், அந்த விடையை எழுதிய தமக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கவும், ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் 90 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு 89 மதிப்பெண்கள் வழங்கி தோல்வியடைந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வழக்கு மீதான இரண்டு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வந்தே மாதரம் முதலில் வங்க மொழியில் இயற்றப்பட்டதா அல்லது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா என பதிலளிக்கும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, பின்னர் வங்கமொழியில் எழுதப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com