மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும்: ஆர்.கே.நகரில் வைகோ-திருநாவுக்கரசர் பிரச்சாரம்

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும் என ஆர்.கே.நகர் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ பேசினார்.
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும்: ஆர்.கே.நகரில் வைகோ-திருநாவுக்கரசர் பிரச்சாரம்
Published on

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பிரச்சாரம் செய்தார். காசிமேட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் காலம் விரைவில் வரும். அவர் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும்.

தமிழகத்தில் இப்போது ஆட்சி செய்வது ஆளுநரா? அல்லது முதல்வரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  பெரியார், அண்ணா வாழந்த பூமியில் மதவாத சக்தியை அனுமதிக்கக் கூடாது. தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆர்.கே.நகர் மக்கள் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com