சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு- உத்தரகாண்டில் சட்டம் வருகிறது

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து உத்தரகாண்ட் அரசு பரிசீலித்து வருகிறது.
திரிவேந்திர சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத்
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத் டேராடூனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.

அதுபோல வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

எனவே வேலை செய்யாத அதிகாரிகள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். அரசால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதிகாரிகள் திறம்பட துரிதமாக செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com