உ.பி.: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 6 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று கவிழ்ந்தன

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் பகுதியில் பூரி-ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
உ.பி.: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 6 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று கவிழ்ந்தன
Published on

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகரின் கடாவுளி பகுதியில் பூரி-ஹரித்வார்-கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டியின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ரெயிலானது ஹரித்வாரில் இருந்து பூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ரெயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று கிடப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மாலை 6 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. ரெயில் போக்குவரத்து அதிமுள்ள பாதையில் விபத்து ஏற்பட்டதால் மற்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com