

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிறந்தவர் ராம் மனோகர் லோஹியா. இவர் சுதந்திரம் கிடைக்க வேண்டி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்டார்.
இந்நிலையில், ராம் மனோகர் லோஹியாவின் நினைவு தினம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம் மனோகர் லோஹியாவின் உருவ படத்துக்கு சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங், ராம மனோகர் லோஹியாவின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலாயம் சிங்கும் ஒன்றாக கலந்து கொண்டது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.