ஊத்துக்கோட்டை அருகே வெயிலுக்கு சுருண்டு விழுந்து தொழிலாளி பலி

ஊத்துக்கோட்டை அருகே வெயிலுக்கு சுருண்டு விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் சென்றாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்டய்யன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அக்னி வெயில் கொடுமை தாங்காமல் திடீரென அவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து கிருஷ்டய்யனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com