

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகள் தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் சமீபத்தில் ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சம் வருமாறு:
சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் அதிக வேகமாக செல்வது, சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் வேகமாக செல்வது, சாலை பள்ளங்களில் சிக்குவது உள்ளிட்ட காரணங்களால் தினமும் 26 பேர் பலியாகி உள்ளனர்.
சராசரியாக ஒரு மணி நேரத்தில் சாலை விபத்துக்களில் 17 பேர் பலியாகி உள்ளனர். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்க முயல்பவர்கள் செல்போனில் போனில் பேசியபடி சென்றதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம். மேலும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வாகனங்களில் செல்போனில் பேசியபடி சென்று 2,138 பேர் பலியாகி உள்ளனர்.
வாகனங்களில் மொபைலில் பேசியபடி சென்று விபத்தில் சிக்கி பலியாவதில் உத்தரபிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைதொடர்ந்து அரியானா மாநிலம் உள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது செல்போனில் போனில் பேசுவதும், செல்பி எடுப்பதும் தற்போது அதிகரித்து வருவதால் விபத்துகள் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.