

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்ட். தவறான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெப்ரஸ்கா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்கு தோல்வியில் முடிந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெர்ராட், நெப்ரஸ்கா நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக தொடர்ந்து மிரட்டினார். மேலும், நீதிமன்ற குமாஸ்தா மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.