பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் 255 மில்லியன் டாலர் நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் 255 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் 255 மில்லியன் டாலர் நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான், ஹக்கானி உள்ளிட்ட பெருவாரியான தீவிரவாத

இயக்கங்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், தேவைப்பட்டால் பாகிஸ்தானில் புகுந்து வான்வழி தாக்குதல்களை நடத்துவோம் என அமெரிக்க உள்துறை மந்திரி பேட்டியளித்திருந்தார்.

அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கையை ஏற்கப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்தது. ‘அமெரிக்காவிடமிருந்து நிதியையோ, ஆயுதங்களையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவீத் பஜ்வா கூறியிருந்தார். அதேசமயம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே தலைவர்களின் பயணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய நிதி உதவியை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு 255 மில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ நிதி உதவி வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் உள்நாட்டு தீவிரவாத குழுக்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் மட்டுமே இந்த உதவியை பாகிஸ்தான் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆரம்பமான நிலையில், அமெரிக்கா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com