உ.பி. மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசம் மாநில மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் உள்ளனர் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #Gujaratviolence #YogiAdityanath
உ.பி. மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ:

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன 

இந்நிலையில். உத்தரப்பிரதேசம் மாநில மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் உள்ளனர் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ரூபானியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன், உபி மக்கள் அங்கு தகுந்த பாதுகாப்புடன் உள்ளனர் என தெரிவித்தார். #Gujaratviolence #YogiAdityanath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com