முத்தலாக் முறைக்கு முடிவுகட்ட மத்திய அரசின் சட்ட மசோதா: முதல் மாநிலமாக உ.பி. அரசு ஒப்புதல்

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு தயாரித்துள்ள சட்ட முன்வடிவுக்கு முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

லக்னோ: 

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் திருமணமான ஒரு இஸ்லாமியர் தனது மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற சட்டப்படியான மாற்று வழி என்ன? என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, முத்தலாக் முறையை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரை கொண்ட மத்திய மந்திரிகள் குழு ’முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை தயாரித்துள்ளது. 

முத்தலாக் என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாகவோ தெரிவிக்கும் கணவனின் விவாகரத்து செல்லாது. அவ்வாறு, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்துள்ள மத்திய அரசு இந்த சட்ட மசோதாவின் பிரதிகளை அனைத்து மாநில அரசுகளின் பார்வைக்கும் கடந்த முதல் தேதி அனுப்பி வைத்தது. 

விவாகரத்துக்கு பின்னர் கணவரின் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்குமான ஜீவனாம்சம் வழங்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விவாகரத்தான தம்பதியர் வாரிசு யாரிடம் வளர வேண்டும் என்ற கேள்வி எழும்போது இதுதொடர்பாக நீதிபதி 

இதுதொடர்பாக, டிசம்பர் பத்தாம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவுக்கு உத்தரப்பிரதேசம் அரசு முதல் மாநிலமாக ஒப்புதல் அளித்துள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த மசோதா ஏற்றுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளுக்கு பின்னர் வரும் 15-ம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். இம்மசோதா மீதான விவாதத்துக்கு பின்னர் தேவைப்பட்டால் சில திருத்தங்களுடன் ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜனாதிபதி கையோப்பமிட்ட பின்னர் வரும் ஜனவரி மாதவாக்கில் இந்த மசோதா முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் புதிய சட்டமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com