

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார்.
அங்கு, குல்தீப் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனையடுத்து குல்தீப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க எய்ம்சில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நீதிபதி வருகை தந்து இன்று விசாரிக்க உள்ளார். இதில் அப்பெண்ணின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் செங்காரும் கொண்டுவரப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.