எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டிஸ்சார்ஜ்

உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #Ravishankarprasad #AIIMS
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டிஸ்சார்ஜ்
Published on

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், சுவாசப் பிரச்சினை காரணமாக  நுரையீரல் சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து நேற்று அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரவி சங்கர் பிரசாத்தின் உடல்நிலை தேறியதையடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதேபோல் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பாஜக தலைவர் அமித் ஷா, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் என மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பாஜக தலைவர் அனில் பலூனி கூறியுள்ளார்.

முன்னதாக இன்று காலை பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் ராம் லால், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறின் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Ravishankarprasad #AIIMS

X

Maalai Malar
www.maalaimalar.com