பாகிஸ்தானில் உள்ள மேலும் ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை தடை

பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் மேலும் ஒரு தீவிரவாத குழுவான அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மேலும் ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை தடை
Published on

பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. உள்நாட்டில் பலவிதமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதுடன் இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்தவும் இந்த அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதி யாசின் மாலிக் என்பவனை தடை செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாத குழுவில் இருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்பட்டுவரும் ஜமாத்-உல்-அஹ்ரார் என்ற தீவிரவாத அமைப்பை ஐ.எஸ்., அல் கொய்தா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று இணைத்துள்ளது.

இந்த இயக்கத்தின் சொத்துக்களை முடக்கவும் இவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்பவர்களை தடுக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

பாகிஸ்தானில் உள்ள மொஹமன்ட் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு சிலரால் தொடங்கப்பட்ட ஜமாத்-உல்-அஹ்ரார் தீவிரவாத இயக்கம் தற்போது நங்கர்ஹார் மாகாணத்தில் இருந்தவாறு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்  எல்லையோரப் பகுதிகளில் தீவிரவாத வெறியாட்டங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com