சங்கராபுரத்தில் குடை பிடித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

ஊரடங்கு நீடிப்பை கண்டித்து சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
குடை பிடித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்  நடத்திய காட்சி.
குடை பிடித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்திய காட்சி.
Published on

ரிஷிவந்தியம்:

மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்கு நீடிப்பை கண்டித்து சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம் நடைபெற்றது. 

சங்கராபுரம் நகரில் தியாகராஜபுர ரோடு,மேட்டுத்தெரு ஆகிய பகுதியில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் தாஹிர் அலி தலைமை வகித்தார். சட்டமன்ற தொகுதி தலைவர் சையத் கவுஸ் முன்னிலை வகித்தார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமத் ரபி பேசினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com